முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திடக்கழிவு மேலாண்மை கட்டுப்பாட்டு மையத்தில் இறையன்பு திடீர் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      தமிழகம்
iaiyanpu 2022 09 24

Source: provided

சென்னை : சென்னை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு மையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னையில் 7 மண்டலங்களில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் உர்பேசர் ஸ்மித் நிறுவனம் ஈடுபடுகிறது. இந்த நிறுவனம் குப்பைகளை அகற்றுதல், பராமரித்தல், பொதுமக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகிறது. 

இந்தப் பணிகளை கண்காணிக்க ஆலந்தூரில் கண்காணிப்பு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் திடக்கழிவு மேலாண்மை தொடர்பாக தினசரி மேற்கொள்ளப்படும் பணிகள் நிகழ் நேரத்தில் கண்காணிக்கப்படுகிறது. 

இந்த மையத்தில் தலைமை செயலாளர் இறையன்பு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மையத்தின் செயல்பாடுகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனாள், சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி, தலைமை பொறியாளர் மசேகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து