முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்காக உலக கோப்பை வெல்ல ஷபாலி வர்மா விருப்பம்

திங்கட்கிழமை, 30 ஜனவரி 2023      விளையாட்டு
Shabali-Verma 2023 01 30

Source: provided

முதலாவது மகளிர் ஜூனியர்(யு19) உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, ஒட்டுமொத்த வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்துள்ளதுடன், வெற்றியை கொண்டாடும் வகையில் நாளை அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியா-நியூசிலாந்து மோதும் கடைசி டி.20 போட்டியை பார்க்க ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனிடையே வெற்றிக்கு பின் கேபடன் ஷபாலி வர்மா கூறியதாவது: அனைத்து வீராங்கனைகளும் ஒருவரையொருவர் ஆதரித்து செயல்படுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நம்பமுடியாத உணர்வு. வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் அனைவருக்கும் நன்றி. அவர்கள் தினமும் எங்களை ஆதரித்தனர். இந்த அழகான அணியை வழங்கிய பிசிசிஐக்கு நன்றி மற்றும் கோப்பை வென்றதில் மிகவும் மகிழ்ச்சி. அடுத்தாக தென்ஆப்ரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள மகளிர் டி.20 உலக கோப்பையை இந்தியாவுக்காக வெல்ல வேண்டும், என்றார்.

________________

ஆடவர் ஹாக்கியில் ஜெர்மனி சாம்பியன்

ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் பெல்ஜியம் ஆதிக்கம் செலுத்தியது. 9-வது நிமிடத்தில் வான் புளோரன்டும் அடுத்த நிமிடத்தில் கோசின்ஸ் டாங்குயும் பீல்டு கோல் அடிக்க பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை பெற்றது.நிர்ணயிக்கப்பட்ட 60 நிமிடங்களில் ஆட்டம் 3-3 என சமன் ஆனது. இதனால் வெற்றியை தீர்மானிக்க பெனால்டி ஷூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில்ஜெர்மனி 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. உலகக் கோப்பை தொடரில் ஜெர்மனி பட்டம் கைப்பற்றுவது இது 3-வது முறையாகும்.

முன்னதாக 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் உலகத் தரவரிசையில் முதலிடம் வகிக்கும் ஆஸ்திரேலியா, நெதர்லாந்துடன் மோதியது. இதில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றது.அந்த அணி சார்பில் கேப்டன் தியரி பிரிங்க்மான் 2 கோல்களையும், ஜான்சென் ஒரு கோலும் அடித்தனர்.

________________

இங்கிலாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்ற தெ.ஆ. அணி

இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 27 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது தென்னாப்பிரிக்க அணி. 2-வது ஒருநாள் ஆட்டமும் புளூம்ஃபாண்டேனில் நடைபெற்றது.  டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் 80, மொயீன் அலி 51, பட்லர் ஆட்டமிழக்காமல் 94 ரன்கள் எடுத்தார்கள். இலக்கை விரட்டியபோது தென்னாப்பிரிக்காவின் முதல் நான்கு பேட்டர்கள் அபாரமாக விளையாடினார்கள். 

கேப்டன் பவுமா 102 பந்துகளில் 1 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 109 ரன்கள் எடுத்தார். மார்க்ரம் 49 ரன்கள் எடுத்தார். கடைசிக்கட்டத்தில் டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து அணியைக் கரை சேர்த்தார். தென்னாப்பிரிக்க அணி 49.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்து 2-வது ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. 3-வது ஒருநாள் ஆட்டம் புதன் அன்று நடைபெறவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து