முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதானி விவகாரத்தில் 6-ம் தேதி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      இந்தியா
Gautam-Adhani 2023 01 27

அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. 

பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும்,  அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஜன.24-இல் வெளியிட்ட ஆய்வறிக்கையில்  அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74,000 கோடி பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. மேலும், அதானிகுழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங் ஆப் இந்தியா வங்கி வழங்கி உள்ளது என தெரிவித்திருந்தது. 

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஞாயிற்றுக்கிழமை 413 பக்க அறிக்கையை வெளியிட்ட அதானி குழுமம், இது குறிப்பிட்ட அதானி நிறுவனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் அல்ல. மாறாக, இந்தியாவின் மீதும், அதன் சுதந்திரம், ஒற்றுமை, ஜனநாயக அமைப்புகளின் தரம், வளர்ச்சிக்கான பாதை மற்றும் இலக்குகளின் மீது நிகழ்த்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என தெரிவித்திருந்தது.

இதற்கு, இந்தியக் கொடியை போர்த்திக்கொண்டு நாட்டை கொள்ளையடிக்கும் அதானி குழுமத்தால்தான் இந்தியாவின் வளர்ச்சி தடை படுகிறது என்றும், மோசடியை தேசியவாதத்தால் மறைக்க முடியாது என ஹிண்டன்பர்க் நிறுவனம் பதிலடி கொடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அதானி குழுமம் மீதான ஹிண்டன்பர்க் முதலீட்டு ஆய்வு நிறுவனம் குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல் முழுமையாக செபி மற்றும் ரிசர்வ் வங்கி தீவிர விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், அதானி குழுமம் மீதான புகார் குறித்து உரிய விசாரணை நடத்த வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.  எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் அறிவித்துள்ளார்.  அதானி குழுமத்தில் செய்த முதலீடு குறித்து பாலிசிதாரர்களுக்கு எல்ஐசி பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து