முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காதல் கண்டிசன்ஸ் அப்ளை இசை வெளியீட்டு விழா

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      சினிமா
Ravinder 2023 02 06

Source: provided

நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவன தயாரிப்பில் LIBRA Productions ரவீந்தர் வழங்கும், இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில், மஹத் நடிப்பில் உருவாகியுள்ள படம் காதல் கண்டிசன்ஸ் அப்ளை. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வினில் பேசிய, தயாரிப்பாளர் ரவீந்தர், நிதின் சத்யாவிற்கும், எனக்கும் இடையேயான புரிதல் சிறப்பானதாக இருக்கும். திரைப்படத்தை அதிக ஆர்வத்துடன் எடுக்க கூடியவர் நிதின். மகத் போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவிற்கு தேவை, விவேக் பிரசன்னா போன்ற ஆகச்சிறந்த நடிகர்கள் கொண்டாடப் பட வேண்டியவர்கள், இவர்கள் இந்த படத்தில் இருப்பது மகிழ்ச்சி. இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் அறிவும், திறமையும் அதிகமாக உடையவர்கள். இந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நான் தயாரித்ததில் இந்த படம் தான் எனக்கு ஒரு லாபகரமான படமாக அமைந்துள்ளது. அனைவருக்கும் நன்றிகள் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து