முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொம்மை நாயகி விமர்சனம்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      சினிமா
Yogi-Babu 2023 02 06

Source: provided

யோகி பாபு நாயகனாக நடித்து தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம்  பொம்மை நாயகி. கதை, யோகி பாபு தன் மனைவி மற்றும் குழந்தையுடன் சராசரி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். ஒரு டீக்கடை தொழிலாளியான யோகி பாபுவுக்கு அந்த வேலையும் திடீரென பறிபோகிறது.. அந்த சமயத்தில் ஊர் திருவிழா நடைபெறுகிறது. அப்போது மகளிடம் சிலர் தவறாக நடக்க முற்பட, அப்பா யோகி பாபு தக்க சமயத்தில் வந்து தன் மகளை காப்பாற்றி விடுகிறார் ஆனாலும் இந்த பிரச்சனையை அவர் நீதிமன்றம் வரை கொண்டு செல்கிறார். இந்தப் போராட்டத்தில் அவருக்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பதுதான் இந்த படத்தின் மீதிக் கதை. யோகி பாபு ஒரு அப்பாவாக தன் முழு உணர்வையும் பிரதிபலித்திருக்கிறார். பொம்மை நாயகியாக நடித்திருக்கும் ஸ்ரீமதி பல இடங்களில் கைத்தட்டலை பெறுகிறார். ஒரு அழுத்தமான கதையை கொடுத்திருக்கும் இயக்குனரை நிச்சயம் பாராட்டித் தான் ஆக வேண்டும். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து