முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக கர்நாடக மாநிலம் மாறியுள்ளது : பிரதமர் மோடி பெருமிதம்

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      இந்தியா
Modi-2022 12 20

Source: provided

பெங்களூரு : முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக கர்நாடக மாநிலம் மாறியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். 

கர்நாடக மாநிலம் தும்கூருவில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனத்தின் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இலகுரக ஹெலிகாப்டரை நாட்டிற்கு அர்ப்பணித்தார் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது, 

21-ம் நூற்றாண்டில் உலகின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஆற்றல் துறை மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. ஆற்றல் உற்பத்தியின் ஆதாரத்தை தேடுவதிலும், ஆற்றல் பகிர்விலும் இந்தியா வலுவாக உள்ளது. 

 சர்வதேச நாணய நிதிய கணிப்பின்படி உலகிலேயே இந்தியா தான் வேகமாக வளரும் பொருளாதார நாடு. பெருந்தொற்று மற்றும் ரஷ்யா உக்ரைன் போர் சமயங்களில் கூட உலகளவில் இந்தியா பிரகாசமான இடத்தில் இருந்தது என்று தெரிவித்தார். 

மேலும் கர்நாடகா புதுமைகளின் பூமி. மாநிலத்தில் ஆளில்லா விமானங்கள் முதல் தேஜாஸ் விமானங்கள் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. முதலீட்டாளர்களின் முதல் தேர்வாக மாநிலம் மாறியுள்ளது. துப்பாக்கிகள், விமானம் தாங்கி போர் விமானங்கள் முதல் போர் விமானங்கள் வரை இந்தியா தயாரிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். 

பின்னர் மின்சார இருசக்கர வாகன பேரணியையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அத்துடன் துமகுருவில் உள்ள ஹெச்.ஏ.எல் ஹெலிகாப்டர் தொழிற்சாலையை நாட்டுக்கு பிரதமர் அர்ப்பணித்தார். மேலும், தும்குரு தொழிற்பேட்டை மற்றும் தும்குருவில் இரண்டு ஜல் ஜீவன் மிஷன் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். 

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், முதல்வர் பசவராஜ் பொம்மை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து