முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட பணிகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

திங்கட்கிழமை, 6 பெப்ரவரி 2023      தமிழகம்
CM-2 2023 02 06

Source: provided

சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கான நலத்திட்ட பணிகளை தாமதமின்றி நிறைவேற்றப்பட வேண்டும் என முதல்வர்  மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 

முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளி மாணவர் விடுதிகளை கல்லூரி மாணவ, மாணவியர் விடுதிகளாக மாற்றப்பட வேண்டும்.  அம்மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகளை எந்தவித தாமதமுமின்றி, உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். 

 மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக நில நிருவாக ஆணையர் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் கலந்து ஆலோசித்து துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டாக்கள் பயனாளிகளுக்கு முறையாக அளந்து காட்டப்பட வேண்டும் என்றும், அங்கு அவர்கள் வீடுகட்டி குடியேறுவதற்கான வசதிகளையும் செய்துதர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் துறை அலுவலர்களுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து