முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசர் ஆன்ட்ரூவுக்கு கிச்சையளித்த இந்திய குருவுக்கு ரூ.32 லட்சம் வழங்க மன்னர் சார்லஸ் மறுப்பு

புதன்கிழமை, 15 மார்ச் 2023      உலகம்
Charles 2023 03 15

இங்கிலாந்து இளவரசர் ஆன்ட்ரூவுக்கு சிகிச்சை அளித்த இந்திய குருவுக்கு ரூ. 32 லட்சம் வழங்க மன்னர் சார்லஸ் மறுத்து விட்டார். அரசின் செலவை குறைக்கும் நோக்கத்தில் அவர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. 

இங்கிலாந்து மன்னர் சார்லசின் சகோதரர் இளவரசர் ஆன்ட்ரூ. 63 வயதான ஆன்ட்ரூவுக்கு இந்தியாவை சேர்ந்த குரு ஒருவர் பல வருடங்களாக சிகிச்சை அளித்து வந்தார். இதற்காக இந்திய குரு அடிக்கடி லண்டன் செல்வார். அவரை ஒரு விடுதியில் தங்க வைத்து ஆன்ட்ரூ ஒரு மாதம் சிகிச்சை பெறுவார். 

அப்போது அவருக்கு மசாஜ் உள்ளிட்ட உடல்நல சிகிச்சைகளை அளிப்பதுடன் போதனையும் செய்து வந்தார். இதற்கான தொகை ரூ. 32 லட்சம் ஆகும். அவரது தாயார் ராணி எலிசபெத் இதற்கு உரிய செலவை எந்தவித கேள்வியும் கேட்காமல் வழங்கி வந்தார். 

தற்போது ராணி எலிசபெத் மரணம் அடைந்ததால் தற்போதைய மன்னர் சார்லசிடம் இந்த தொகைக்கு உரிய ஆவணம் கையெழுத்துக்கு வைக்கப்பட்டது. ஆனால் அதில் கையெழுத்திட சார்லஸ் மறுத்து விட்டார். 

அத்துடன் இந்திய குருவுக்கு வழங்க வேண்டிய ரூ.32 லட்சத்தையும் அவர் வழங்கவில்லை. இதற்கு உரிய பணத்தை ஆன்ட்ரூவையே செலுத்துமாறு மன்னர் சார்லஸ் கூறி விட்டார். அரசின் செலவை குறைக்கும் நோக்கத்தில் இந்திய குருவுக்கு ரூ. 32 லட்சத்தை வழங்க சார்லஸ் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து