எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : கே.எல். ராகுல் மற்றும் ஜடேஜாவின் பொறுப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
சுற்றுப்பயணம்...
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகியுள்ளதால், அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்துகிறார்.
சிராஜ் பந்துவீச்சில்...
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.அதன்படி தொடக்க வீரர்களாக டிரேவிஸ் ஹெட் , மிட்சேல் மார்ஷ் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் டிரேவிஸ் ஹெட் 5 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கேப்டன் ஸ்மித் களமிறங்கினார்,அவர் நிதானமாக விளையாடினார்.
188 ரன்களுக்கு...
மார்ஷ் அதிரடி காட்டினார். பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்ட அவர் அரைசதம் அடித்தார்.மறுபுறம் ஸ்மித் 22 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஆடிய மார்ஷ் 65 பந்துகளில் 81 ரன்கள் குவித்து வெளியேறினார் . தொடர்ந்து லபுசேன் 15 ரன்கள் , ஜோஷ் இங்கிலிஷ் 26 ரன்கள் , கேமரூன் கிரீன் 12 ரன்கள் ,ஸ்டாய்னிஸ் 5 ரன்கள் , மேக்ஸ்வெல் 8 ரன்களும் எடுத்து சீரான இடைவெளியில் வெளியேறினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
கோலி - சூர்யகுமார்...
இந்தியா சார்பில் முகமது ஷமி ,சிராஜ் தலா 3 விக்கெட் , ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.தொடர்ந்து 189ரன்கள் இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷான், சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்கத்தில் இஷான் கிஷான் 3 ரன்களில் வெளியேறினார். பின்னர் வந்த விராட் கோலி 4 ரன்கள், சூர்யகுமார் யாதவ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து கில் 20ரன்கள் எடுத்து வெளியேறினார்.
தடுமாற்றம்...
இதனால் இந்திய அணி 40 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் கே.எல்.ராகுல் , ஹார்திக் பாண்டியா இணைந்து நிலைத்து ஆடினர். ஹார்திக் 25 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து கே.எல் . ராகுல் , ஜடேஜா அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். இருவரும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினர் .சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்தார்.
5 விக்கெட்...
இறுதியில் இந்திய அணி 39.5 ஓவர்களில் 191ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராகுல் 75ரன்களும் , ஜடேஜா 45ரன்களும் எடுத்தனர்.ஆஸ்திரேலியா சார்பில் மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட் , ஸ்டாய்னிஸ் 2 விக்கெட் வீழ்த்தனர். இந்த வெற்றியால் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
நேரில் கண்டு ரசித்த ரஜினி
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் ஆட்டத்தைக் நேற்று நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டுகளித்தார். மும்பை வான்கடே விளையாட்டுத் திடலில் நடைபெறும் ஒருநாள் ஆட்டத்தைக் காண நடிகர் ரஜினிகாந்த் நேற்று வருகை தந்தார். மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கலேவும் ரஜினியும் ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே உரையாடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 2 weeks ago |
-
பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு முடிவு பரிதாபத்துக்கு உரியது: ஏர் மார்ஷல் பாரதி
12 May 2025புதுடெல்லி : பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முடிவு செய்தது பரிதாபத்துக்குரியது என இந்திய விமானப்படையின் ஏர் மார்ஷல் ஏ.கே.பாரதி தெரிவித்தார்.
-
ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சூர்யா
12 May 2025முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்
-
தங்கக்குதிரை வாகனத்தில் பச்சைப்பட்டுடுத்தி மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்
12 May 2025மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று (மே 12) காலை 6 மணியளவில் நடைபெற்றது.
-
கூவாகம் திருவிழா 2025: தூத்துக்குடியை சேர்ந்த சக்தி ‘மிஸ் திருநங்கை’ ஆக தேர்வு
12 May 2025விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விழாவில் ‘மிஸ் திருநங்கை’ பட்டத்தை தூத்துக்குடியைச் சேர்ந்த சக்தி என்ற திருநங்கை பெற்றார்.
-
பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நீலகிரியில் உற்சாக வரவேற்பு
12 May 2025ஊட்டி : பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க நீலகிரி சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அங்கு தி.மு.க.வினர், பொதுமக்கள் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர்.
-
ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை
12 May 2025சென்னை : தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலையில் இருமுறை சரிவு காணப்பட்டது. நேற்று ஒரேநாளில் சவரன் ரூ.2360 குறைந்து விற்பனையானது.
-
தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
12 May 2025சென்னை : தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்பட 7 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 13) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாட்டின் பாதுகாப்பிற்காக 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு: இஸ்ரோ
12 May 2025புதுடெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதல் சற்று தணிந்திருக்கும் நிலையில், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணியில
-
சேவை செய்யும் தூய உள்ளங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் செவிலியர் தின வாழ்த்து
12 May 2025சென்னை : தன் எதிரில் உள்ள மனிதரின் பாலினம், சமூகத் தகுதி, சாதி, மதம், நிறம் பற்றி சிந்திக்காமல், அனைவருக்கும் சிகிச்சை வழங்கி ஆதரிக்கும் தூய உள்ளங்களுக்கு, உலக செவிலியர
-
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் புற்றுநோய் கண்டறியும் திட்டம்: அமைச்சர் தொடங்கி வைத்தார்
12 May 2025திருவள்ளூர் : திருப்பாச்சூர் துணை சுகாதாரம் நிலையத்தில் சமுதாய அளவிலான புற்று நோய் கண்டறியும் திட்ட விரிவாக்கத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
-
நட்புக்காக விழாவில் பங்கேற்ற சிம்பு
12 May 2025“DD நெக்ஸ்ட் லெவல்” பட விழாவில் நடிகர் சிம்பு.
-
சேலம் முதிய தம்பதி கொலை: பீகார் இளைஞர் கைது
12 May 2025சேலம் : சேலத்தில் மளிகை கடை நடத்தி வந்த முதிய தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிளஸ்-2 விடைத்தாள் நகல் பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
12 May 2025சென்னை : பிளஸ்-2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகிக்கப்பட்ட நிலையில் விடைத்தாள் நகலுக்கு இன்று முதல் மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளத
-
'தொடரும்’ திரை விமர்சனம்
12 May 2025பாரதிராஜா விடம் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
-
‘மையல்’ இசை வெளியீடு
12 May 2025ஐகான் சினி கிரியேஷன்ஸ் எல்எல்பி தயாரிப்பில் இயக்குநர் APG ஏழுமலை இயக்கத்தில் நடிகர்கள் சேது, சம்ரிதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘மையல்’.
-
'கஜானா ' திரை விமர்சனம்
12 May 2025அடர்ந்த காட்டு பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு புதைத்து வைத்த பொக்கிஷம் இருப்பதாகவும், அதனை டைனோசர் காலங்களில் வாழ்ந்த யாளி விலங்கு பாதுகாத்து வருவதாகவும் சொல்ல
-
எல்லை பகுதிகளில் தனிந்த போர் பதற்றம்: 32 விமான நிலையங்களிலும் மீண்டும் சேவை தொடக்கம்
12 May 2025புதுடெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே கடந்த வாரம் நடந்த ஆயுத மோதலைத் தொடர்ந்து சிவில் விமானங்களை இயக்க 32 விமான நிலையங்களுக்கு விதிக்கப்பட்ட தடை திரும்பப்
-
ஜோரா கைய தட்டுங்க’ டிரெய்லர் வெளியீடு
12 May 2025நடிகர் யோகிபாபு நடிப்பில், இயக்குநர் விநீஷ் மில்லினியம் இயக்கத்தில், 'ஜோரா கைய தட்டுங்க'மாயாஜால வித்தையை நிகழ்த்தும் கலைஞரின் வாழ்வியலை மையப்படுத்திய படம்
-
'நிழற்குடை' திரை விமர்சனம்
12 May 2025அமெரிக்கா செல்ல வேண்டும் என்ற கனவோடு வாழும் விஜித் - கண்மணி தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 12-05-2025
12 May 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-05-2025
13 May 2025 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
12 May 2025- மதுரை கள்ளழகர் காலை வண்டியூரில் சேச வாகனத்திலும், தேனூர் மண்டபம் எழுந்தருளி பகல் கருடாரூடராய் மண்டூக மகரிசிக்கு மோட்சம் அருளுதல்.
-
இன்றைய ராசிபலன்
12 May 2025 -
இன்றைய நாள் எப்படி?
12 May 2025