முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி மாற்றி விட்டார் : பா.ஜ. தலைவர் ஜே.பி.நட்டா புகழாரம்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      இந்தியா
JP-Natta-2022 12 23

Source: provided

புதுடெல்லி : இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார் என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார். 

 தமிழக பா.ஜ.க.வின் யுவா மோர்ச்சா பிரிவு சார்பில் தேசிய இளைஞர் நாடாளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, காணொலி வாயிலாக நேற்று கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;- 

இந்தியாவின் அரசியல் கலாச்சாரத்தை பிரதமர் மோடி மாற்றியுள்ளார். நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் சென்று இந்திய அரசியலில் பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள மாற்றத்தை அனைவருக்கும் எடுத்துரைக்க வேண்டும் என்று இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன். 

2014-க்கு முன் நமது நாடு ஊழல் நிறைந்த நாடாக, கொள்கை முடங்கி, பின்தங்கிய நிலையில், மெதுவான வளர்ச்சி ஆகிய பண்புகளைக் கொண்டிருந்தது. இன்று நம் நாடு ஒரு பெரிய மாற்றத்தை தழுவியுள்ளது. 

பிரதமர் மோடியின் கீழ், உலகிற்கு வழிகாட்டும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. நமது தேசத்தின் இளைஞர்களை காணொலி காட்சி மூலம் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த தேசிய இளைஞர் பாராளுமன்றம் நிகழ்ச்சிக்காக தேஜஸ்வி சூர்யா மற்றும் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவை வாழ்த்துகிறேன். 

இந்த இளைஞர் பாராளுமன்றத்தின் மூலம் தேசத்தின் விஷயங்களில் இளைஞர்களின் ஈடுபாடு அதிகரிக்கும். இந்த மாபெரும் முயற்சி இங்கிருந்து தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞர்களின் ஆற்றலைச் சேர்ப்பது, மக்களின் குரல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் முதிர்ந்த ஜனநாயகத்தின் அங்கமாக மாறுவது நமது பொறுப்பு. இவ்வாறு ஜே.பி.நட்டா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து