முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி3 விமர்சனம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      சினிமா
D3-Review 2023 03 20

Source: provided

மருத்துவர் ஒருவர் செய்யும் சட்ட விரோதமான செயல்களை புலனாய்வு செய்து வெளிக்கொண்டு வரும் ஒரு காவல் ஆய்வாளரின் அனுபவம் தான் இந்த டி3 படக்கதை. குற்றாலத்திலுள்ள D3 காவல் நிலைய ஆய்வாளரான பிரஜினின் எல்லைக்கு உட்பட்ட இடத்தில் ஒரு இளம் பெண் மர்மமாக உயிரிழக்கிறார். இதனை விசாரிக்க தொடங்கும் பிரஜினை மர்ம கும்பல் கடத்துகிறது. அதிலிருந்து அவர் தப்பினாரா? குற்றவாளிகள் என்னவானார்கள்? என்பது தான் இப்படத்தின் பரபரப்பான திரைக்கதை. காவல் ஆய்வாளரக தனது நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார் பிரஜின். நாயகி வித்யா பிரதீப் இரண்டு காட்சிகளில் மட்டும் வந்து போகிறார். ஒரே நாளில் நடைபெறும் சம்பவம் என்பதால் படத்தை பரபரப்பாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி. படத்தை இன்னும் சற்று கூர்மையாக்கி இருந்தால் பாராட்டக்கூடிய படைப்பாக D3 படம் அமைந்திருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து