முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோஸ்டி விமர்சனம்

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      சினிமா
Gosti-review 2023 03 20

Source: provided

முழுக்க நகைச்சுவைக்கு முக்கியம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் கோஸ்டி. காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, கிங்ஸ்லி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிறப்புத்தோற்றத்தில் ஜெய், ராதிகா ஆகியோர் வருகிறார்கள். கே.எஸ்.ரவிக்குமார் பெரிய ரவுடி. அவர் சிறையிலிருந்து தப்புகிறார். தன்னைச் சிறைக்கு அனுப்பிய காவல்துறையினரைக் கொல்லத் திட்டமிடுகிறார். அதைத் தடுத்து கடமையாற்றத் துடிக்கிறார் காவல் ஆய்வாளரான காஜல் அகர்வால். பின்னர் என்ன நடக்கிறது? என்பதுதான் படம். நாயகி காஜல் அகர்வால் காக்கிச்சட்டை அணிந்திருந்தாலும் அதற்கான கம்பீரம் குறைவுதான். கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு உட்பட எல்லோருமே கதையின் தன்மை புரிந்து நடித்திருக்கிறார்கள். ஏற்கெனவே குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாண், சிரிப்புக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து இயக்கியிருக்கிறார். மொத்தத்ததில் இப்படம் சில இடங்களில் நம்மை சோதித்தாலும் பல இடங்களில் சிரிக்க வைக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து