முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுமக்களை சமாளிக்கவே இந்த பட்ஜெட் தாக்கல் : டிடிவி தினகரன் கருத்து

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
TTV 2023 02 08

Source: provided

தஞ்சாவூர் : செல்லும் இடங்களில் எல்லாம் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என பொதுமக்கள் கேட்டு வருவதால் வேறு வழியின்றி பொதுமக்களை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அ.ம.மு.க. பொதுச் செயலாளர்  தினகரன் தெரிவித்தார். 

தஞ்சாவூரில் நேற்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் நேரத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்த தி.மு.க அரசு, தற்போது தகுதியின் அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது ஏன் என்று புரியவில்லை.

இதே போல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வருவது, சம வேலைக்கு சம ஊதியம் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றுவது சம்பந்தமாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 

செல்லும் இடங்களில் எல்லாம் கொடுத்த வாக்குறுதிகள் என்ன ஆயிற்று என பொதுமக்கள் கேட்டு வருவதால் வேறு வழியின்றி பொதுமக்களை சமாளிப்பதற்காக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து