முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை : அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
Senthil-Balaji 2022 12 -09

Source: provided

சென்னை : தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது. முதல்வர்  கடந்த இரண்டு ஆண்டுகளாக கடினமாக உழைத்து வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களை மக்களுக்கு வழங்கியுள்ளார். சென்னை மெட்ரோவுக்கு ரூ. 10 ஆயிரம் கோடியும், கோவை மெட்ரோவுக்கு ரூ. 9 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மதுரை மெட்ரோவுக்கு ரூ. 8,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துறைக்கும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள், புதிய திட்டங்கள், மக்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளன. 

குறை சொல்லவேண்டும் என்பதற்காகவே சிலர் செயல்பட்டு வருகின்றனர். மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால், எடப்பாடி பழனிசாமி முழு நிதிநிலை அறிக்கையையும் கேட்டிருக்கலாம். அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கருத்துக்களை அவர் கூறியுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து