முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் வெற்றி: இலங்கையை 'ஒயிட்வாஷ்' செய்தது நியூசிலாந்து அணி

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      விளையாட்டு
New-Zealand 2023 03 20

Source: provided

வெல்லிங்டன் : இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது.

நியூசி. முன்னிலை...

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டியின் கடைசி பந்தில் நியூசிலாந்து திரில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

வெல்லிங்டனில்... 

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கடந்த 17ம் தேதி வெல்லிங்டனில் தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து வில்லியம்சன் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோரின் இரட்டை சதத்தின் உதவியுடன் 123 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 580 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பாலோ-ஆன் ஆனது... 

இதையடுத்து தனது முதல் இன்னிங்சை தொடங்கியிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 66.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் எடுத்து பாலோ-ஆன் ஆனது. அந்த அணி தரப்பில் கேப்டன் கருணரத்னே 89 ரன்கள் எடுத்தார். பாலோ-ஆன் ஆனதை அடுத்து தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 358 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.

டெஸ்ட் தொடர்... 

அந்த அணி தரப்பில் தனஞ்ஜெயா டி சில்வா 98 ரன்னும், கருணரத்னே 51 ரன்னும், குசல் மெண்டிஸ் 50 ரன்னும் எடுத்தனர். இதன் மூலம் நியூசிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2 போட்டிகள் கொண்ட டெஸ் தொடரை 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. டெஸ்ட் தொடர் முடிவடைந்ததை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் வரும் 25ம் தேதி ஆக்லாந்தில் தொடங்குகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து