முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிரம்ப் கைது செய்யப்படுவது போன்ற போலி புகைப்படங்கள் : வலைதளங்களில் வெளியானதால் சர்ச்சை

புதன்கிழமை, 22 மார்ச் 2023      உலகம்
Trump 2023 03 22

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது செய்யப்படுகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அவர் கைது செய்யப்படுவது போன்ற போலியான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க அமெரிக்கா மாடல் ஸ்டோமி டேனியல்ஸ்க்கு டிரம்ப் 1,30,000 டாலர் வழங்கி இருந்ததாக கூறப்பட்டு வரும் குற்றச்சாட்டில் டிரம்ப் விரைவில் கைதாவார் என்று செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில் தன் மீதான குற்றச்சாட்டை டிரம்ப் தொடர்ந்து மறுத்து வந்தார். எனினும் டிரம்ப் உறுதியாக கைதாவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்காக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் போலீசார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. நியூயார்க், வாஷிங்டன், லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஒருவேளை போலீசாரால் டிரம்ப் கைது செய்யப்பட்டால் அந்த நிகழ்வுகள் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளன.  

இந்தப் படங்கள் போலியானது என்றாலும் அது தத்ரூபமாக உருவாக்கப்பட்டிருந்ததால் இணையவாசிகள் பலரும் குழப்பம் அடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து