எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் தாக்கல் செய்து அதை நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
கவர்னர் ஒப்புதல்...
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடைசெய்து, கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. பின்னர் அமைந்த தி.மு.க. அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குபடுத்துதல் அவசர சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு அக்.1-ம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.
தமிழக அரசு பதில்...
இதையடுத்து, அக். 19-ம் தேதி சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு, கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இது தொடர்பாக கவர்னர் கேட்ட விளக்கங்களுக்கு தமிழக அரசு பதில் அளித்தது. சில மாதங்களாக மசோதாவை கிடப்பில் போட்டு வைத்திருந்த நிலையில், கடந்த 8-ம் தேதி மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார்.
சட்டப்பேரவைக்கு...
இதுதொடர்பாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறும்போது, ‘‘ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்யும் சட்டத்தை நிறைவேற்ற, தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உள்ளது. வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மீண்டும் மசோதாவை நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்புவோம். இரண்டாவது முறையாக அனுப்பும்போது, அதை கவர்னர் நிராகரிக்க வாய்ப்பில்லை’’ என்று தெரிவித்தார்.
தமிழக அரசு விளக்கம்...
இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா இன்று (மார்ச் 22) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டு கவர்னருக்கு மீண்டும் அனுப்ப தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், கவர்னர் எழுப்பிய கேள்விகள் மற்றும் அரசு அளித்த பதில்களையும் பேரவையில் விளக்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


