முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கியூப் விளையாட்டில் 9 வயது சீன சிறுவன் புதிய சாதனை

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      உலகம்
China-Yiheng 2023 03 24

Source: provided

பெய்ஜிங் : சீனாவை சேர்ந்த இளம் வீரரான யிஹெங் (9), கியூப் விளையாட்டில் புதிய வேக சாதனையை படைத்துள்ளார். 

முன்னதாக, 4.86 வினாடிகளில் கூட்டாக சாதனை படைத்த கியூபிங் வீரர்களான மேக்ஸ் பார்க் (அமெரிக்கா) மற்றும் டைமன் கொலாசின்ஸ்கி (போலந்து) ஆகியோரை யிஹெங் வீழ்த்தியுள்ளார். கின்னஸ் உலக சாதனையின்படி, ஸ்பீட் கியூபிங் பிராடிஜி யிஹெங் வாங் (சீனா) 3x3x3 என்கிற சுழலும் புதிர் கன சதுரத்தை 4.69 வினாடிகளில் முடித்து வேகமான சராசரி நேரத்திற்கான சாதனையை முறியடித்துள்ளார். 

மலேசியாவின் கோலாலம்பூரில் கடந்த 12-ம் தேதி அன்று நடந்த யோங் ஜுன் கேஎல் ஸ்பீட் கியூபிங் 2023 நிகழ்ச்சியில், அரையிறுதி போட்டியில் யிஹெங் தனது சாதனை நேரத்தை பதிவு செய்தார். 

இப்போட்டியில், ஐந்து முறை முடிவுகளின் கணக்கில், யிஹெங் 4.35, 3.90, 4.41, 5.31 மற்றும் 6.16 வினாடிகளில் போட்டியைப் பதிவு செய்தார். உலக கியூப் சங்கம் விதிகளின்படி, சராசரியை கணக்கிடும் போது வேகமான மற்றும் மெதுவான நேரங்கள் தள்ளுபடி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 6 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து