எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் நேற்று (மார்ச் 24) காலமானார். அவருக்கு வயது 84. அவரின் மறைவை அடுத்து நடிகர் விஜய் நேற்று நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
கடந்த நான்கு ஆண்டுகளாகவே பக்கவாதம் மற்றும் வயது மூப்பின் காரணமான தொந்தரவுகளால் பாதிக்கப்பட்டிருந்த பி.சுப்ரமணியம் நேற்று காலை இயற்கை எய்தினார். இந்தத் தகவல் வெளியானதை அடுத்து சமூக வலைதளங்களில் அஜித் ரசிகர்கள் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அஜித் தந்தை சுப்ரமணியத்தின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து, எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்ய ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என அஜித் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியானது. இதையடுத்து நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில், தந்தையை இழந்த நடிகர் அஜித்தின் வீட்டிற்கு நடிகர் விஜய் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் வீட்டிற்கு சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


