முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி?

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      தமிழகம்
EVKS 2023-03-16

Source: provided

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுவுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு போரூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டது.

இதனால் தனிமைப்படுத்தப்பட்டு தனிவார்டில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கொரோனா தொற்றில் இருந்து அவர் மீண்டு விட்டதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்து அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் விரைவில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி  எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனாவில் இருந்து குணமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறிய நிலையில் மீண்டும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து