முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் நகைகள் மாயமானதாக புகார்

வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2023      சினிமா
Vijay-Yesudas 2023 03 31

Source: provided

சென்னை : சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் பாடகர் விஜய் ஏசுதாஸ் வீட்டில் 60 சவரன் திருடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் திருடு போன நகைகள் குறித்து கடந்த மாதம் தான் தெரியவந்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரபல பின்னணி பாடகரான விஜய் ஏசுதாஸ், அவரது மனைவி தர்ஷனா பாலகோபால் ஆகியோர் சென்னை அபிராமபுரம் 3-வது தெருவில் வசித்து வருகின்றனர். இவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த 60 சவரன் நகை மற்றும் வைரம் பதித்த சில தங்க நகைகளை கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2-ம் தேதி பார்த்துள்ளார்.

அதன் பின்னர் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி விஜய் ஏசுதாஸ் மனைவி தர்ஷனா பாலகோபால் நகை இருந்த பீரோவை திறந்து பார்த்த போது நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். மேலும் நகைகள் காணாமல் போனது தொடர்பாக போலீசில் புகார் அளிக்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு அபிராமபுரம் காவல் நிலையத்தில் நகைகள் காணாமல் போனது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் அபிராமபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விஜய் ஏசுதாஸ் வீட்டில் பணியாற்றும் நபர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து