முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலவச ரேசன் பொருளுக்கு முண்டியடித்த மக்கள்: பாகிஸ்தானில் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 12 பேர் உயிரிழப்பு

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      உலகம்
Pak 2023 04 01

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இலவச ரேசன் பொருள்  வாங்க ஒரே சமயத்தில் மக்கள் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

பாகிஸ்தானில் கடந்த சில மாதங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களுக்குத் தேவையான அரிசி, கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், அந்நாட்டின் கராச்சி மாகாணம் சிந்து தொழிற்பேட்டை பகுதியில் தொண்டு நிறுவனம் சார்பில் இலவச ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது. அந்தப் பொருட்களை வாங்க ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்தனர். 

அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக குழந்தைகள் உள்பட பலர் மயக்கமடைந்து சுருண்டு விழுந்தனர். மயங்கி விழுந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறி குழந்தைகள், பெண்கள் உள்பட 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொண்டு நிறுவன நிர்வாகிகளை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து