முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலை 1 விமர்சனம்

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      சினிமா
Vidutalai-1 2023 04 01

Source: provided

காடு அழிப்பு, கனிமவளக் கொள்ளை இவற்றுக்கு எதிரான மக்கள் போராட்டம், அவற்றை ஒடுக்கத் துடிக்கும் காவல்துறை உள்ளிட்ட அரசு எந்திரங்கள். அதே போல் காவல்துறைக்குள்ளேயே நடக்கும் அட்டூழியங்கள் ஆகியவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது விடுதலை பாகம் 1. கடைநிலைக் காவலர் குமரேசன் வேடத்துக்கு அச்சுஅசலாகப் பொருந்தியிருக்கிறார் சூரி. நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார். வாத்தியார் என்று படம் முழுக்க அவரைப் பற்றிப் பேசினாலும் படத்தில் கொஞ்ச நேரமே வந்து தன் முத்திரையைப் பதித்துப் பாராட்டுப் பெறுகிறார் விஜய்சேதுபதி. சூரியின் காதலியாக வரும் பவானிஶ்ரீ எளிமையான அழகு. காவல்துறை அதிகாரிகளாக வரும் சேத்தன், கவுதம்மேனன், ராஜீவ்மேனன், தமிழ் ஆகியோர் சிறப்பாக நடித்து கவனம் ஈர்க்கிறாரகள். வேல்ராஜின் ஒளிப்பதிவும் இளையராஜாவின் பின்னணி இசையும் இரண்டறக்கலந்து கொடுக்கும் காட்சி அனுபவங்கள் சில்லிட வைக்கின்றன. கடைநிலைக் காவலருக்கு அந்தத் துறையில் நடக்கும் கொடுமைகள், ஒடுக்கப்படும் காவலர், அத்துறை மக்கள் மீது கட்டவிழ்த்து விடும் அடக்குமுறைகள் ஆகியனவற்றோடு பலவற்றை நினைவுபடுத்தி நெருப்பு மூட்டியிருக்கிறார் இயக்குநர் வெற்றிமாறன். விடுதலை..  தெறிக்க விடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து