முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தினசரி பாதிப்பு சற்று குறைந்தது : புதிதாக 2,995 பேருக்கு கொரோனா பாதிப்பு

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      இந்தியா
India Corona 2022 12-06

Source: provided

புதுடெல்லி : நாட்டில் தினசரி பாதிப்பு சற்று குறைந்தது. புதிதாக 2,995 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,995 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. பாதிப்பு கடந்த 28-ந்தேதி 1,573 ஆக இருந்தது. மறுநாள் 2,151, கடந்த 3 தினங்களுக்கு முன் 3,016, நேற்று முன்தினம் 3,094 ஆக இருந்தது. இந்நிலையில் 2 நாட்களுக்கு பிறகு பாதிப்பு நேற்று 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் அதிகபட்சமாக கேரளாவில் 765 பேர், மகாராஷ்டிராவில் 425 பேர், குஜராத்தில் 338 பேர், கர்நாடகாவில் 286 பேர், டெல்லியில் 240 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 18 ஆயிரத்து 781 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று முன்தினம் 1,840 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 41 லட்சத்து 71 ஆயிரத்து 551 பேர் குணமடைந்துள்ளனர். தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை நேற்று முன்தினத்தைவிட 1,146 அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி 16,354 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பால் நேற்று முன்தினம் டெல்லி, கர்நாடகா, பஞ்சாப்பில் தலா 2 பேர், குஜராத்தில் ஒருவர் என 7 பேர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 2-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,876 ஆக உயர்ந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து