முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 2-வது லீக் ஆட்டத்தில் மழைக்குறுக்கீடு: டக்வொர்த் லீவிஸ் முறையில் வெற்றிப்பெற்ற பஞ்சாப் அணி

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      விளையாட்டு
Rajapaksa 2023 04 01

Source: provided

மொகாலி : ஐ.பி.எல் 2-வது லீக் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறையில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் அணி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

2 லீக் ஆட்டங்கள்...

16-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தி குஜராத் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதையடுத்து ஐபிஎல் தொடரில் நேற்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. அதன்படி நேற்றஉ மாலை 3.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

பந்துவீச்சு தேர்வு...

இந்த ஆட்டத்துக்கான டாசில் ஜெயித்த கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதிரடியில் மிரட்டிய பிரம்சிம்ரன் சிங் 23 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

191 ரன்கள் குவிப்பு...

இதையடுத்து பனுகா ராஜபக்சே களம் இறங்கினார். அதிரடியில் மிரட்டிய ராஜபக்சே 30 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். அரைசதம் அடித்த நிலையில் நிலைத்து நின்று பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 32 பந்தில் 50 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்துள்ளது. இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி ஆடியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மந்தீப் சிங் மற்றும் ரஹ்மத்துலா குர்பாஸ் ஆகியோர் களம் புகுந்தனர்.

இம்பேக் பிளாயராக... 

இதில் மந்தீப் 2 ரன், அடுத்து வந்த அனுகுல் ராய் 4 ரன், குர்பாஸ் 22 ரன் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து வருண் சக்கரவர்த்திக்கு பதிலாக இம்பேக் பிளாயராக வெங்கடேஷ் அய்யர் களம் இறங்கினார். இவர் ஒருபுறம் நிலைத்து நின்று ஆட மறுபுறம் இறங்கிய நிதிஷ் ராணா 24 ரன், ரிங்கு சிங் 4 ரன், ரஸல் 35 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். நிலைத்து நின்று ஆடிய வெங்கடேஷ் அய்யரும் 34 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

மழை குறுக்கீடு...

கொல்கத்தா 16 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதன் காரணமாக ஆட்டம் நிறுத்தி வைக்க்கப்பட்டது. மழை முடிந்த பின்னர் ஆட்டம் தொடங்கும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த வேளையில் மழை நிற்காத காரணத்தால் ஆட்டம் முடிக்கப்பட்டது. டக் வொர்த் லீவிஸ் முறைப்படி கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 153 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் அந்த அணி 146 ரன்களே எடுத்திருந்தது. இதையடுத்து 7 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நடப்பு ஐ.பி.எல். தொடரில் பஞ்சாப் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 4 days 12 hours ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 1 month 3 weeks ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 1 month 3 weeks ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து