முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பு ஆண்டில் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை: மைக்ரோசாப்ட் அறிவிப்பு

வியாழக்கிழமை, 11 மே 2023      உலகம்      வர்த்தகம்
Microsoft 2023 05 11

சான் பிரான்சிஸ்கோ, நடப்பு ஆண்டில் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

டெக் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான மைக்ரோசாப்ட், கடந்த ஜனவரியில் சுமார் 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நடப்பு ஆண்டில் தங்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. 

நிறுவனத்தின் நிதிநிலை சூழல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் போனஸ், பங்கு ஒதுக்குதல், பணி உயர்வு போன்றவை இந்த ஆண்டு இருக்கும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

தங்கள் நிறுவனத்தின் இயங்குதள மாற்றம் மற்றும் மாறி வரும் பொருளாதார சூழல் காரணமாக இந்த முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா, ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் அதில் செயற்கை நுண்ணறிவு திறன் சார்ந்த தொழில்நுட்ப மாறுதல் குறித்தும் தெரிவித்துள்ளாராம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து