முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடப்பாண்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 600 இணைகளுக்கு திருமணங்கள் நடத்த அறநிலைய துறை முடிவு

வியாழக்கிழமை, 18 மே 2023      ஆன்மிகம்      தமிழகம்
hindu-aranila-2023-05-18

சென்னை, நடப்பாண்டில் 600 இணைகளுக்கு திருமணங்கள் நடத்த, இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. 

பொருளாதாரத்தில் பின்தங்கிய 600 இணைகளுக்கு நடப்பாண்டில் திருமணம் நடத்தி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு திருமணம் நடந்த நிலையில், இந்தாண்டு கூடுதலாக 100 திருமணங்கள் நடத்தப்பட உள்ளது.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களின் சார்பில் நடத்தப்படும் இலவச திருமணங்களில் ஒரு இணை திருமணத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள திட்ட செலவின தொகை ரூ. 20 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

திருமண இணைகளுக்கு திருமாங்கல்யம் 4 கிராம், மணமக்கள் ஆடை, மாலை, 20 நபர்களுக்கு உணவு, பீரோ, கட்டில், மெத்தை, தலையணைகள், பாய், கைக் கடிகாரங்கள், மிக்ஸி, சமையல் பாத்திரங்கள், பூஜைப் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 4 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 10 hours ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 10 hours ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து