முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      வர்த்தகம்
Gold-2023-05-04

சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது.  

சென்னை, தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒரு நாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தங்கத்தின் விலை நேற்று சற்று குறைந்துள்ளது. 

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ.44,840க்கு விற்பனை செய்யப்பட்டது.  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,605-க்கு விற்பனையானது. அதே போல ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு குறைந்து 76.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிலோ வெள்ளி 76.200-க்கு விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து