முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி குறித்த கருத்து: கார்கே, கெஜ்ரிவாலுக்கு எதிராக டெல்லி கமிஷனரிடம் புகார் மனு

சனிக்கிழமை, 27 மே 2023      இந்தியா
Kharge-Kejriwal 2023 05 27

புதுடெல்லி, ஜனாதிபதி திரெளபதி முர்முவுக்கு எதிராக வேண்டுமென்றே கருத்துகளைத் தெரிவித்ததாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு எதிராக டெல்லி காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரான வினீத் ஜிண்டால் என்பவர் இது தொடர்பாக டெல்லி காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில், "பாராளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழா தொடர்பாக மல்லிகார்ஜுன கார்கே, அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதியின் சாதியை வேண்டுமென்றே குறிப்பிட்டு, அதன் காரணமாகவே அவர் அழைக்கப்படவில்லை என்பது போல் தெரிவித்துள்ளனர். இது ஜனாதிபதி சார்ந்த ஆதிவாசி மற்றும் எஸ்டி சமூகத்தினரை, பிற சமூகத்தவர்களுக்கு எதிராக தூண்டிவிடும் செயல்.

அதோடு, அரசு மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தும் முயற்சி. அரசியல் ரீதியில் ஆதாயம் அடையும் நோக்கில் இவ்வாறு அவர்கள் தெரிவித்திருப்பது 121, 153ஏ, 505, 34 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றமாகும். எனவே, இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து