முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பால்டிக் நாடுகளின் அதிபராக ஓரின சேர்க்கையாளர் ரின்கெவிக்ஸ் தேர்வு

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      உலகம்
Rinkewicz-2023-06-01

ஹெல்சிங்கி, பால்டிக் நாடுகளின் அதிபராக ரின்கெவிக்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

பால்டிக் நாடுகளில் ஒன்றான லாட்வியாவில் 100 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில், பெரும்பான்மைக்கு தேவையான வாக்குகளை விட ஒரு வாக்கு கூடுதலாக பெற்று வெளியுறவு அமைச்சராக பதவி வகித்த எட்கர்ஸ் ரின்கெவிக்ஸ்-ஐ அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்துறை மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது அதிபராக இருக்கும் எகில்ஸ் லெவிட்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். இதனால் ரின்கெவிக்ஸை எதிர்த்து போட்டியிட்ட தொழிலதிபர் உல்டிஸ் பிலென்ஸ் 25 வாக்குகள் மட்டுமே பெற்றார். 

ரின்கெவிக்ஸ் 2014-ம் ஆண்டில்தான் ஒரு ஓரினசேர்க்கையாளர் என்று பகிரங்கமாக அறிவித்தவராவார். அதன்படி, பால்டிக் நாடுகளின் முதல் ஒரினசேர்க்கை அதிபர் என்ற பெயரை ரின்கெவிக்ஸ் பெற்றுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து