Idhayam Matrimony

சேலம் பட்டாசுக் கிடங்கில் திடீர் தீ விபத்து: 3 பேர் பலி

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      தமிழகம்
Salem-fire--2023-06-01

சேலம், சேலம் பட்டாசுக் கிடங்கில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 3 பேர் பலியான சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் இரும்பாலை அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியில் ஏராளமானோர் உரிய உரிமம் பெற்று நாட்டு வெடி பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.  சேலம் மற்றும் அதனை சுற்றுவட்டார  பகுதிகளில் நடைபெறும் திருவிழாவிற்காக சர்க்கார் கொல்லப்பட்டியில் இருந்து அதிக அளவில் நாட்டு வெடி மருந்து சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் நாட்டு வெடி பட்டாசு தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டியில் சதிஸ் என்பவர் உரிமை பெற்று நாட்டு பட்டாசுகளை தயாரித்து விற்பனை செய்து வந்துள்ளார்.  இந்த நிலையில் நேற்று காலை சதீஷ் மற்றும் பத்துக்கு மேற்பட்டோர் பட்டாசுக் கிடங்கில் நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 4 மணியளவில் பட்டாசு தயாரிப்பின் போது ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பயங்கர சத்தத்துடன் பட்டாசுடன் வெடித்து சிதறியது.

இதில்  பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த அனைவரும் தூக்கி எரியபட்டனர். இதில் சதீஷ் மற்றும் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் அறிந்த அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் காயம் அடைந்தவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் மகேஸ்வரி, பிருந்தா, வனிதா, மேனகா மற்றும் மேகலா ஆகியோர் நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இது சம்பவத்தை தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வெடி விபத்து சம்பவம் குறித்தும், உரிய உரிமம் பெற்றுள்ளாரா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காரணமாக இந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து