முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      தமிழகம்
Train 2023-04-06

Source: provided

சென்னை : ஒடிசா ரயில் விபத்திற்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது.

ஒடிசா மாநிலத்தில் நடந்த ரெயில் விபத்தை தொடர்ந்து சென்னை சென்ட்ரலில் இருந்து ஹவுராவுக்கு இயக்கப்படும் தினசரி ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இரு மார்க்கத்தில் இருந்தும் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன. சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் காலை 7.20 மணிக்கு ஒரு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலும் அதே போல் இரவு 7.20 மணிக்கு ஒரு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்படுகிறது.

28 மணி நேர பயணத்துக்கு பிறகு இந்த ரெயில்கள் ஹவுரா சென்றடையும். பல ஆண்டுகளாக இந்த வழித் தடத்தில் இந்த இரு ரெயில்களும் தான் இயக்கப்படுகிறது. ஆனால் இப்போது பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதாக பயணிகள் தெரிவித்தனர். விபத்துக்கு பிறகு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை நேற்று மீண்டும் தொடங்கியது. வழக்கமாக காலை 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரெயில் 10.45 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டது.

இந்த ரெயிலில் 3 குளிர்சாதன பெட்டிகள், 11 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் 2 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த பயணிகளால் ரெயில் நிரம்பி இருந்தது. ரெயில்கள் ரத்தானதால் கடந்த 2 நாட்களாக சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்த தொழிலாளர்கள் ஏராளமானோர் முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணம் செய்தனர்.

இந்த ரெயில் கூடூர், நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்திரி, விசாகபட்டினம், பலாசா, பெர்காம்பூர் வழியாக நாளை மாலை 6 மணியளவில் ஹவுரா சென்றடையும். இரவு 7.20 மணிக்கு புறப்பட வேண்டிய ஹவுரா ரெயிலும் வழக்கம் போல் புறப்பட்டு செல்லும் என்று ரெயில்வே துறை அறிவித்துள்ளது. இதற்கிடையில் ஒடிசாவில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்ட சிறப்பு ரெயில் நேற்று பிற்பகல் சென்னை வந்தடைந்தது.

நேற்றும் பாதிக்கப்பட்ட வர்களின் குடும்பத்தினர் யாராவது ஒடிசா செல்வதாக இருந்தால் அவர்களுக்கு இலவச பாஸ் வழங்கப்படும். அவர்கள் கூடுதல் தகவல்களுக்கு 044-2533 0952, 044-2533 0953, 044-2535 4771, 044-2535 4148, 044-2533 0953 என்ற தொலை பேசி எண்கள் மூலமும், 90030 61974 எனும் கைப்பேசி எண் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 4 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 3 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து