முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தவறான தகவலை பரப்ப வேண்டாம்: போராட்டத்தில் இருந்து விலகலா? - சாக்‌ஷி மாலிக் திட்டவட்ட மறுப்பு

திங்கட்கிழமை, 5 ஜூன் 2023      விளையாட்டு
Wrestler 2023-05-29

Source: provided

புதுடெல்லி : போராட்டத்தில் இருந்து விலகுவதாக வெளியான தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ள சாக்‌ஷி மாலிக், தவறான தகவலை பரப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் உள்ளிட்ட மல்யுத்த வீரர்கள் நள்ளிரவில் சந்தித்தனர். அப்போது டெல்லி காவல்துறை விரைவாக நடவடிக்கை எடுக்க அமித்ஷாவிடம் வீரர்கள் கோரிக்கை விடுத்ததாக தகவல் வெளியாகிள்ளது. 2 மணி நரேத்திற்கு மேல் நீடித்த சந்திப்பில் பிரிஜ் பூஷன் மீது குற்றப்பத்திரிகை விரைவில் தாக்கல் செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். 

இந்த நிலையில் சாக்ஷி மாலிக் போராட்டத்தில் இருந்து விலகியதாக நேற்று தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை அவர் மறுத்துள்ளார். போராட்டத்தை கைவிட்டதாக வெளியான தகவல் தவறானது. தவறான தகவலை பரப்ப வேண்டாம். நீதிக்கான போராட்டத்தில் இருந்து யாரும் பின்வாங்கவில்லை. பின்வாங்கவும் மாட்டோம். இவ்வாறு அவர் டுவிட்டரில் விளக்கமளித்துள்ளார்.

பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளன முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷண் சரண் சிங் பாலியல் தொல்லை அளித்ததாக 18 வயதுக்குக் குறைவான வீராங்கனை உள்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் குற்றஞ்சாட்டினா்.  இந்த விவகாரத்தில் அவரை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரா்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 days 11 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 day ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 day ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 1 month 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து