Idhayam Matrimony

பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது : பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவிப்பு

சனிக்கிழமை, 10 ஜூன் 2023      தமிழகம்
Teacher 2023-06-05

Source: provided

சென்னை : பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம் கிடையாது என்று பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் அறிவித்துள்ளது. 

பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும் என்று மாநில திட்ட இயக்குனருக்கு கோரிக்கை மனு கொடுத்து இருந்தார். இதற்கு பள்ளி கல்வித்துறை மாநில திட்ட இயக்கக இயக்குனர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி ஒரு பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். இங்கு பணிபுரியும் முறையான பணியாளர்கள் அயற்பணியிலும் பிற பணியாளர்கள் தொகுப்பூதியம் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தேவைக்கேற்ப பணியமர்த்தப்படுகிறார்கள். 

ஒப்பந்த பணியாளர்கள் வருங்காலத்தில் அரசுத் துறையில் முறையான ஊதியத்திற்கோ ஆண்டு ஊதிய உயர்விற்கோ, நிரந்தர நியமனத்திற்கோ மற்றும் முன்னுரிமைக்காகவோ கோரி விண்ணப்பிக்கக் கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே நியமனம் செய்யப்படுகிறார்கள். 

பகுதி நேர பணியாளர்கள் அரசாணை பள்ளிக் கல்வித்துறை கடந்த 11.11.2011-ல் வழங்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி நியமனம் செய்யப்படுகிறார்கள். இந்த அரசாணைப்படி ஆண்டுக்கு 11 மாத ஊதியம் மட்டுமே வழங்க வேண்டும் (மே மாதம் தவிர்த்து) என குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து