முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15,16-ம் தேதிகளில் மகளிர் உரிமை திட்ட முகாம்கள் நடைபெறாது: தமிழக அரசு

சனிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2023      தமிழகம்
TN 2023-04-06

Source: provided

சென்னை : வருகிற 15 மற்றும் 16-ம் தேதிகளில் மகளிர் உரிமைத் தொகைக்காக திட்டமிடப்பட்டிருந்த முகாம்கள் நடைபெறாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 

மகளிர் உரிமைத் தொகைக்கான 2-ம் கட்ட முகாம்கள் கடந்த 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. வரும் 16-ம் தேதியுடன் முகாம்கள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டது. 2-ம் கட்ட முகாம்கள் இப்போது நடைபெற்று வருகின்றன. 

அதே சமயம் விடுபட்டவர்களின் வசதிக்காக வருகிற 19 மற்றும் 20-ம் தேதிகளில் முகாம்கள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வருகிற 15-ம் தேதி சுதந்திர தினம் என்பதால் அதையொட்டி கிராமசபை கூட்டங்களும் நடைபெறும். 

எனவே வருகிற 15 மற்றும் 16-ம் தேதிகளில் மகளிர் உரிமைத் தொகைக்காக திட்டமிடப்பட்டிருந்த முகாம்கள் நடைபெறாது. இதற்குப் பதிலாக தமிழகம் முழுவதும் 34 ஆயிரம் இடங்களில் வருகிற 19 மற்றும் 20-ம்தேதிகளில் நடைபெறக்கூடிய முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து