Idhayam Matrimony

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை காண நடிகர் ரஜினிக்கு கோல்டன் டிக்கெட்

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      சினிமா
Rajini 2023-09-19

Source: provided

மும்பை : ஐ.சி.சி. உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண பி.சி.சி.ஐ. தலைமை செயலாளர் ஜெய் ஷா, கோல்டன் டிக்கெட்டை நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கியுள்ளார். 

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்கின்றன. 

உலகக்கோப்பை தொடரின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் சென்னையில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. 

இதன் ஒரு நிகழ்வாக பி.சி.சி.ஐ. இந்தியாவின் தலைசிறந்த நட்சத்திரங்களுக்கு உலகக்கோப்பை போட்டிகளை நேரில் காண கோல்டன் டிக்கெட் வழங்கி வருகிறது. அதன்படி பி.சி.சி.ஐ. தலைமை செயலாளர் ஜெய் ஷா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண நடிகர் அமிதாப் பச்சன், முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட் வழங்கி கவுரவித்துள்ளார். 

இந்நிலையில் நேற்று நடிகர் ரஜினிகாந்துக்கு பி.சி.சி.ஐ. தலைமை செயலாளர் ஜெய் ஷா உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை நேரில் காண கோல்டன் டிக்கெட் வழங்கி உள்ளார். இதனை பி.சி.சி.ஐ. தனது எக்ஸ் (முன்பு டுவிட்டர்) தளத்தில் தெரிவித்துள்ளது. ஜெய் ஷா கோல்டன் டிக்கெட்டை ரஜினிகாந்துக்கு வழங்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து