எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை : அண்ணாவை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அண்ணாமலைக்கு தி.மு.க. வினர் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கேள்வி எழுப்பி உள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மேற்கு 6-ம் பகுதி செயலாளர் விளாங்குடி கே.ஆர். சித்தன் தலைமையில் விளாங்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ சிறப்புரை ஆற்றினார். இதில் நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம் எஸ் பாண்டியன், ஆர். அண்ணாதுரை, பா குமார், சக்தி மோகன், பரவை ராஜா, வி.பி.ஆர். செல்வகுமார்,கு.திரவியம், எம்.எஸ். கே. மல்லன், சோலைராஜா, ஏ.பார்த்திபன், பைக்காரா கருப்புசாமி, முத்துவேல், மார்கெட் மார்நாடு, இளைஞரணி கண்ணன், மலைச்சாமி, பைக்காரா செழியன், கரிசல்பட்டி சேகர், முத்து முருகன், கந்தன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது,
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மாற்றத்தை உருவாக்கியவர் அண்ணா. அண்ணா இருக்கும் வரை கலைஞரை முன்னிலைப்படுத்தவில்லை தாய் எப்படி அனைத்து பிள்ளைகளும் ஒரே மாதிரி வலப்பாரோ அதேபோன்றுதான் அண்ணா அனைவரையும் ஒன்றாக நினைத்தார்.பல தலைவர்களை உருவாக்கிய பெருமை அண்ணாவிற்கு உண்டு. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காலத்திலும் ஆணுக்கு பெண் நிகர் என்ற சட்டத்தை கொண்டு வந்தார்.
கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தை அண்ணா தான் காப்பாற்றினார். இதை 1970-ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் எங்கள் குடும்பமே நடுத்தெருவுக்கு வந்து இருக்கும் என முரசொலி மாறனே சொல்லியிருக்கின்றார். அப்படிப்பட்ட தலைவரை கருணாநிதியின் குடும்பம் மறக்கலாமா? அண்ணாவை பற்றி ஒருவர்(அண்ணாமலை) இழிவாக பேசிய போது கூட்டணியில் இருந்த நாங்களே குரல் கொடுத்தோம். ஆனால் தி.மு.க.வினர் அதற்கு கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை. கடவுளே வந்தாலும் நாங்கள் விடமாட்டோம். .நாங்கள் எம்.ஜி.ஆரின் தொண்டர்கள். ஆனால் தி.மு.க.வினர் அமலாக்க துறை ரெய்டு வந்து விடுமோ என பயந்து எதுவும் பேசவில்லை. ஆர்.எஸ்.பாரதி மட்டும் பேசினால் போதுமா? தி.மு.க. கொதித்து எழுந்திருக்க வேண்டாமா? அண்ணா, எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா இருந்த போது கூட வாரிசு அரசியல் செய்யவில்லை, இன்று தி.மு.க மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் என வாரிசு அரசியல் செய்கின்றனர். அடுத்து இன்பநிதி என்று சொல்கிறார்கள். ஏழைகள் படும் துன்பங்கள் எல்லாம் முதல்வருக்கு தெரியவில்லை. செந்தில் பாலாஜியை நீக்கினால் ஊழல் தெரிந்து விடும் என அமைச்சரவையில் நீக்காமல் வைத்துள்ளனர் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்2 weeks 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்3 weeks 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 1 week ago |