முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் பரபரப்பு: ரயில்வே பெண் போலீசை தாக்கியவர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      இந்தியா
Aneesh-Khan 2023-09-22

Source: provided

லக்னோ : உத்தர பிரதேசத்தில் ரயில்வே பெண் போலீசை தாக்கிய நபர் என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.  

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி கண்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து பிரயாக்ராஜ்சங்கம் வரை சராயு எக்ஸ்பிரஸ் ரயில் இயங்கி வருகிறது. கடந்த மாதம் 30-ம் தேதி இந்த ரயிலில் பயணம் செய்த பெண் போலீஸ் ஒருவரை மர்ம நபர்கள் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த பெண் போலீஸ், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அவரை மீட்ட பயணிகள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது உடல் நலம் தேறியுள்ளார். 

இது குறித்து வந்த புகாரின் பேரின்  அயோத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடிவந்தனர்.  விசாரணையில்  அனீஷ் கான் என்பவர் தான் பொண் போலீசை கொடூரமாக தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அனீஷ் கானை போலீசார் வலை வீசி தேடி வந்த நிலையில்,அனீஷ் கான் தனது கூட்டாளிகளுடன் பதுங்கி இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, சிறப்பு அதிரடி படையினர் மற்றும் போலீசார் அவர்களை கைது செய்ய முயன்றனர். அப்போது அனிஷ் கான் உள்பட 3 பேர் இருந்தனர். 

போலீசாரை பார்த்தவுடன் அவர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்றனர். உடனே சுதாரித்த போலீசார், தற்காப்புக்காக பதில் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சண்டையில் அனீஷ் கான் சுட்டுக்கொல்லப்பட்டார். 

ஆசாத், விசாம்பர் தயால் ஆகிய இரண்டு பேரும் காயம் அடைந்த நிலையில் போலீசார் கைது செய்துள்ளனர். ரயிலில் பெண் போலீஸ் மீது கொடூரமாக தாக்குதல் நடத்திய வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் போலீசார் என்கவுண்ட்டரில் கொல்லப்பட்டு இருப்பது அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து