எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஹாங்சோவ் : 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
2-வது நாளான நேற்று முன் தினம் இந்தியா 5 பதக்கங்களை அறுவடை செய்தது. இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் 'சுட்டு' தந்தனர். பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்சே ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,886 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. 1896.5 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவிலும் அரியானாவைச் சேர்ந்த 19 வயதான ரமிதா பதக்கமேடையில் ஏறினார். அவர் 230.1 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தினார். இவர் சென்னையில் நேகா சவானிடம் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மெகுலி கோஷ் 208.3 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு சரிந்தார். சீன வீராங்கனை யுதிங் ஹூவாங் 252.7 புள்ளிகளுடன் ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
துடுப்பு படகு போட்டியில் 'டபுள்ஸ் ஸ்கல்' பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட் - அரவிந்த் சிங் ஜோடி 2 ஆயிரம் மீட்டர் தூரத்தை 6 நிமிடம் 28.18 வினாடிகளில் எட்டிப்பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தியது. சீனாவின் ஜூன்ஜி பேன்-மேன் சூன் இணை முதலிடத்தை (6 நிமிடம் 23.16 வினாடி) பிடித்தது. இதே போல் துடுப்பு படகு ஜோடி பிரிவில் இந்தியாவின் பாபு லால் யாதவ் - லேக் ராம் இணை (6 நிமிடம் 50.41 வினாடி) வெண்கலப்பதக்கத்தை பெற்றது.
8 பேர் கொண்ட அணியினர் துடுப்பு படகை செலுத்தும் பந்தயத்தில் இந்தியா 2 ஆயிரம் மீட்டர் இலக்கை 5 நிமிடம் 43.01 வினாடிகளில் 2-வதாக கடந்து வெள்ளிப்பதக்கத்தை சுவைத்தது. நீரஜ், நரேஷ், ஜஸ்விந்தர் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய குழுவை விட 2.84 வினாடி முந்திய சீனாவுக்கு தங்கப்பதக்கம் கிட்டியது. ஆண்கள் பிரிவு கைப்பந்தில் லீக் சுற்றில் கலக்கிய இந்தியாவின் 'வீறுநடை' கால்இறுதியுடன் முடிவுக்கு வந்தது. 8 முறை ஆசிய சாம்பியனான ஜப்பான் 25-16, 25-18, 25-17 என்ற நேர் செட் கணக்கில் இந்திய அணியை தோற்கடித்தது. ஆண்கள் ஆக்கியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இன்றி களம் புகுந்த இந்தியா 16-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை (ஏ பிரிவு) ஊதித்தள்ளியது. லலித் குமார் உபாத்யாய் 4 கோலும், மன்தீப்சிங், வருண்குமார் தலா 3 கோலும் அடித்தனர். இந்திய அணி அடுத்து சிங்கப்பூரை நாளை சந்திக்கிறது. டென்னிசில் தொடக்க ஆட்டங்களில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் லிங் ஹோ டின் மார்கோவை (மக்காவ்) பந்தாடினார். இரட்டையர் பிரிவில் சகெத் மைனெனி- ராம்குமார் கூட்டணி 6-2, 6-3 என்ற நேர் செட்டில் நேபாளத்தின் பிரதிப் கட்கா- அபிஷேக் பாஸ்டோலாவை போட்டுத் தாக்கினர். டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியா 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. இதில் முதல் 4 ஆட்டங்கள் முடிவில் 2-2 என்று சமநிலையில் இருந்த போது, கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் சரிவில் இருந்து மீண்டு வந்து 5-11, 7-11, 11-9, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் கென்ஜிகுலோவை சாய்த்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அடுத்த சில மணி நேரங்களில் கரைந்து போனது. இதைத் தொடர்ந்து நடந்த கால்இறுதியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் தோற்று பதக்க வாய்ப்பை கோட்டை விட்டது. இந்திய அணியில் ஹர்மீத் தேசாய், சத்யன், சரத்கமல் மூன்று பேரும் தோல்வி அடைந்தனர். இதன் பெண்கள் பிரிவில் இந்தியா 2-3 என்ற கணக்கில் தாய்லாந்திடம் தோற்று வெளியேறியது. கால்பந்தில் பெண்கள் பிரிவில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் (பி பிரிவு) தாய்லாந்திடம் பணிந்தது.
ஏற்கனவே சீனதைபேயிடம் தோற்று இருந்த இந்தியா கால்இறுதிவாய்ப்பை இழந்து நடையை கட்டியது. ஆண்கள் பிரிவில் இந்தியா- மியான்மர் இடையிலான ஆட்டம் 1-1 கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது. தனது பிரிவில் 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை உறுதி செய்த இந்திய அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. நாக்-அவுட் சுற்றில் இந்திய அணி சவுதிஅரேபியாவுடன் மோத இருக்கிறது.
பெண்கள் குத்துச்சண்டையில் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் 2 முறை ஆசிய சாம்பியனான நுயேன் தி டேமை (வியட்நாம்) எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார். 54 கிலோ பிரிவில் பிரீத்தி பவாரும் வெற்றி பெற்றார். செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விதித் குஜராத்தி 2-வது சுற்றில் கஜகஸ்தானின் காஸிபெக் நோஜர்பெக்கிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.
பெண்கள் பிரிவில் கோனெரு ஹம்பி, ஹரிகா தங்களது முதல் இரு ரவுண்டில் வெற்றி கண்டனர். இந்த ஆசிய விளையாட்டின் முதல் தங்கப்பதக்கத்தை துடுப்புபடகு பந்தயத்தில் வென்ற சீனா துடுப்பு படகு, துப்பாக்கி சுடுதல், வுசூ, நீச்சலில் பதக்க வேட்டை நடத்தியது. 2-வது நாள் முடிவில் சீனா 20 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 30 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. தென்கொரியா 5 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 14 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் 7-வது இடத்தில் இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மில்க் பால்![]() 1 day 3 min ago |
தக்காளி சாஸ்![]() 4 days 3 hours ago |
ஓட்ஸ் சீஸ் கீரை தோசை![]() 1 week 1 day ago |
-
ரேஷன் அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் நிவாரண நிதி உண்டு : தமிழ்நாடு அரசு தகவல்
09 Dec 2023சென்னை : குடும்ப அட்டையில் ஒருவர் பெயர் இருந்தாலும் நிவாரண தொகை உண்டு என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
4 மாவட்டங்களில் நடைபெறும் நிவாரண பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
09 Dec 2023சென்னை : மிக்ஜம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகள் குறித்து தமிழ்நாடு அரசு வி
-
நியாய விலைக்கடைகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவதில் தாமதமா? - அமைச்சர் சக்கரபாணி விளக்கம்
09 Dec 2023சென்னை : நியாய விலைக்கடைகளுக்கு உணவுப் பொருட்கள் தடையின்றி வழங்கப்படுகின்றன என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
-
பீகாரில் அமித்ஷா தலைமையில் 4 மாநில முதல்வர்களின் கூட்டம்
09 Dec 2023புதுடெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம், ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல கூட்டமைப்பின் 26-வது
-
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காசாவில் பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது
09 Dec 2023காசா : இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
-
சிறு, குறு நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த அவகாசம் : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
09 Dec 2023சென்னை : மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உட்பட 4 மாவட்டங்களில் சிறு, குறு நிறுவனங்களுக்கும் மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கொட்டப்பட்டதா?- ஆவின் நிர்வாகம் விளக்கம்
09 Dec 2023சென்னை : ஆவின் பால் பாக்கெட்டுகள் வீணாக கால்வாயில் கொட்டப்பட்டது என்பது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்று தெரிவித்துள்ள ஆவின் நிர்வாகம், ஆவின் பால் பாக்கெட்டுகள் வீ
-
டிவில்லியர்ஸ் அதிர்ச்சி தகவல்
09 Dec 2023அண்மையில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவரது யூடியூப் சேனலில் பேசியிருப்பதாவது., நான் எனது கண்ணில் அடிபட்ட விஷயத்தை சாதரண
-
பெண்கள் பிரிமீயர் லீக்: அதிக விலைக்கு ஏலம் போன ஆஸி. வீராங்கனை அனபெல்
09 Dec 2023மும்பை : பெண்கள் பிரிமீயர் லீக் போட்டிக்கான ஏலத்தில் அதிக விலைக்கு ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல்லை ரூ.2 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.
-
இந்தியா உள்பட 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் அனுமதி: இந்தோனேசியா முடிவு
09 Dec 2023மணிலா : இந்தியா உட்பட 20 நாடுகளுக்கு விசா இல்லாமல் தங்கள் நாட்டிற்குள் நுழைய அனுமதி வழங்க இந்தோனேசியாவின் சுற்றுலா மற்றும் பொருளாதார அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.
-
உலகக்கோப்பை போட்டி நடந்த பிட்ச்கள் ‘ஆவரேஜ்’ சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மதிப்பீடு
09 Dec 2023லண்டன் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா - த
-
நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் வெற்றி பெற உழைத்திடுவோம் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு
09 Dec 2023சென்னை : நீட் ஒழிப்பு கையெழுத்து இயக்கம் மகத்தான வெற்றியை பெறுகிற வகையில் உழைத்திடுவோம் என்று தெரிவித்துள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இதன் மூலம் நம் மாணவர்களின் மருத்த
-
கவர்னர் மாளிகை அருகே என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு
09 Dec 2023சென்னை : கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
-
நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்படுவது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம்
09 Dec 2023சென்னை : மழையால் பாதிக்கப்படவர்களுக்கு நிவாரண தொகை ரொக்கமாக வழங்கப்படுவது ஏன்? என்று தற்போது தமிழ்நாடு அரசு விளக்கமளித்துள்ளது.
-
வேலூர் சிறையில் இருந்து கைதிகள் 8 பேர் விடுதலை
09 Dec 2023வேலூர் : வேலூர் மத்திய சிறையில் இருந்து 8 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இதுவரை 33 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
-
சுப்ரீம் கோர்ட் உத்தரவு எதிரொலி: இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு டிச. 21-ம் தேதி தேர்தல் அறிவிப்பு
09 Dec 2023புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு டிச. 21-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அயோத்தி ராமர் கோயிலுக்கு அர்ச்சகர்கள் 50 பேர் நியமனம்
09 Dec 2023அயோத்தி : துதேஸ்வர் வேத வித்யாபீடத்தில் படித்த காசியாபாத்தை சேர்ந்த மோகித் பாண்டே உள்ளிட்ட 50 பேர் அயோத்தி ராமர் கோயில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
-
சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீட்டு பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம்
09 Dec 2023புதுடெல்லி : சர்வதேச தலைவர்களுக்கான ஒப்புதல் மதிப்பீட்டு பட்டியலில் பிரதமர் மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.
-
ஒடிசாவில் வருமான வரித்துறை சோதனையில் இதுவரை ரூ.250 கோடி பறிமுதல்
09 Dec 2023புவனேஸ்வர் : ஒடிசா மாநிலத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் ரூ.250 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது
09 Dec 2023சண்டிகர் : பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்த டிரோனை பி.எஸ்.எப். வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
-
மிக்ஜம் புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு நாளை தமிழகம் வருகை
09 Dec 2023சென்னை : மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்தியக்குழு திங்கள்கிழமை தமிழகம் வருகிறது.
-
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்: ரவுடி கருக்கா வினோத்தை 5 நாள் காவலில் எடுக்க என்.ஐ.ஏ. முடிவு
09 Dec 2023சென்னை : கவர்னர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ரவுடி கருக்கா வினோத்தை காவலில் எடுக்க என்.ஐ.ஏ முடிவு செய்துள்ளது.
-
இந்தியாவை நம்பிக்கையுடன் இந்த முழு உலகமும் பார்க்கிறது : பிரதமர் நரேந்திரமோடி பேச்சு
09 Dec 2023புதுடெல்லி : கொள்கைக்கு முன்னுரிமை கொடுத்தால் வளர்ச்சியைக் காணலாம் என்பதை இந்தியா உலகிற்கு காட்டியுள்ளது என்று தெரிவித்துள்ள பிரதமர் மோடி, முழு உலகமும் இந்தியாவை
-
சத்தீஷ்கரில் 5 பெண்கள் உட்பட 20 நக்சலைட்டுகள் போலீசில் சரண்
09 Dec 2023ராய்ப்பூர் : சத்தீஷ்கரில் 5 பெண்கள் உட்பட 20 நக்சலைட்டுகள் போலீசில் சரணடைந்தனர்.
-
சீரியல் நடிகையை கரம்பிடித்த ஜெயிலர் பட நடிகர் கிங்ஸ்லி
10 Dec 2023சென்னை : ஜெயிலர் படத்தில் நடித்த பிரபல நடிகர் ரெடின் கிங்ஸ்லி, சீரியல் நடிகையான சங்கீதா பாரிஸ் ஜெயராஜை திருமணம் செய்து கொண்டுள்ளார்.