முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்க கானா புறப்பட்டார் தமிழக சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      தமிழகம்
Appavu 2023-09-26

Source: provided

சென்னை : சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கானா நாட்டில் நடைபெறவுள்ள 66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் பங்கேற்பதற்க்காக சென்னை விமான நிலையத்திலிருந்து நேற்று புறப்பட்டார். 

2023 அக்டோபர் மாதம் 03 முதல் 05 வரை கானா நாட்டின் தலைநகர் அக்ராவில் நடைபெறவிருக்கும் 66-வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக பேரவைத் தலைவர் அப்பாவு கலந்து கொள்கிறார்.

முனைவர். கி.சீனிவாசன், சட்டமன்ற செயலாளர் இம்மாநாட்டில் இந்திய வட்டார பிரதிநிதிகளின் செயலாளராக கலந்து கொள்கிறார். மேலும் ப.பத்மகுமார் பேரவைத் தலைவரின் சிறப்பு தனிச் செயலாளர் அவர்களும் மேற்குறித்த மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

பேரவைத் தலைவர் செயலாளர் மற்றும் பேரவைத் தலைவரின் சிறப்பு தனிச் செயலாளர் ஆகியோர் மேற்குறிப்பிட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 26-ம் தேதி(செவ்வாய்க்கிழமை) நேற்று காலை 9.50 மணிக்கு எமிரேட்ஸ் விமானம்  மூலம் துபாய் சென்று அங்கிருந்து எகிப்து, மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டு.பின்பு அக்ரா நகருக்கு அக்டோபர்  03-ம் தேதி  அன்று சென்றடையவுள்ளனர். பேரவைத் தலைவர் செயலாளர் மற்றும் பேரவைத் தலைவரின் சிறப்பு தனிச் செயலாளர் ஆகியோர் மேற்குறிப்பிட்ட மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு அக்டோபர் 07-ம் தேதி (சனிக்கிழமை) காலை 08.25 மணியளவில் எமிரேட்ஸ் விமானம்  மூலம் சென்னை வந்தடைகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து