முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியை அனுப்ப மத்திய அரசு முடிவு

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      இந்தியா
manipur-2023-05-04

புது டெல்லி, மணிப்பூரில் இரண்டு மாணவர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் மீண்டும் வன்முறை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராகேஷ் பல்வாலை வடகிழக்கு மாநிலத்துக்கு திரும்ப அனுப்ப உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

தற்போது ஸ்ரீநகரில் மூத்த காவல் கண்ணிப்பாளராக பணியாற்றி வரும் ராகேஷ் பல்வாலை முன்கூட்டியே அவரது சொந்த மாநிலத்துக்கு திருப்பி அனுப்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்திற்கு உதவும் வகையில் அவர் பணியாற்ற முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மணிப்பூரில் தற்போது நிலவி வரும் சட்டம், ஒழுங்கு சூழ்நிலை காரணமாக அங்கு கூடுதல் அதிகாரிகளின் தேவையைக் காரணம் காட்டி உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு ஒரு மாதத்துக்கு பின்னர், அமைச்சரவையின் நியமனக் குழு அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

மணிப்பூரில் இணைய சேவை முடக்கம் ரத்து செய்யப்பட்டவுடன் வெளியான, இரண்டு மாணவர்களின் சடலங்களை கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அங்கு புதிய வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து