Idhayam Matrimony

ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஐதராபாத்தை சேர்ந்தவர் தயாரிப்பு

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      இந்தியா
Saree

Source: provided

திருப்பதி:ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஒன்றை தயாரித்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர். 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நல்ல விஜய். இவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார். கடந்த காலங்களில் இவர் மணம் வீசக் கூடிய சேலைகளை தயாரித்தார். இதற்காக மூலிகைகளை பயன்படுத்தினார். மேலும் ஊசி முனையில் நுழையக்கூடிய புடவை ஒன்றையும் உருவாக்கி சாதனை படைத்தார். 

இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இவரிடம் பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை செய்ய அணுகினார். இதனை தொடர்ந்து விஜய் ரூ. 2.80 லட்சம் செலவில் நிறம் மாறக்கூடிய சேலை ஒன்றை தயாரித்தார். 

இந்த சேலையை தயாரிக்க 30 கிராம் தங்கம் மற்றும் 500 கிராம் வெள்ளியை உருக்கி கலவையாக சேர்த்துள்ளார். பகல், இரவு மற்றும் மின் வெளிச்சத்திற்கு ஏற்றபடி இந்த புடவை 3 விதமான நிறங்களில் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரிடம் தொழிலதிபர் ரூ. 2.80 லட்சம் கொடுத்து சேலையை பெற்றுக் கொண்டார். விஜய் தற்போது ரூ. 25 லட்சம் மதிப்பில் ஒரு சேலையை நெசவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி  (படம் உண்டு)

போல நிறம் மாறும் சேலை

ஐதராபாத்தை சேர்ந்தவர் தயாரிப்பு 

திருப்பதி, செப். 29-

ரூ. 2.80 லட்சத்தில் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலை ஒன்றை தயாரித்துள்ளார் ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர். 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் நல்ல விஜய். இவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார். கடந்த காலங்களில் இவர் மணம் வீசக் கூடிய சேலைகளை தயாரித்தார். இதற்காக மூலிகைகளை பயன்படுத்தினார். மேலும் ஊசி முனையில் நுழையக்கூடிய புடவை ஒன்றையும் உருவாக்கி சாதனை படைத்தார். 

இந்த நிலையில் ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் இவரிடம் பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை செய்ய அணுகினார். இதனை தொடர்ந்து விஜய் ரூ. 2.80 லட்சம் செலவில் நிறம் மாறக்கூடிய சேலை ஒன்றை தயாரித்தார். 

இந்த சேலையை தயாரிக்க 30 கிராம் தங்கம் மற்றும் 500 கிராம் வெள்ளியை உருக்கி கலவையாக சேர்த்துள்ளார். பகல், இரவு மற்றும் மின் வெளிச்சத்திற்கு ஏற்றபடி இந்த புடவை 3 விதமான நிறங்களில் அடிக்கடி மாறிக் கொண்டே இருக்கும் என கூறப்பட்டுள்ளது. 

பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய சேலை வெகுவாக கவர்ந்துள்ளது. அவரிடம் தொழிலதிபர் ரூ. 2.80 லட்சம் கொடுத்து சேலையை பெற்றுக் கொண்டார். விஜய் தற்போது ரூ. 25 லட்சம் மதிப்பில் ஒரு சேலையை நெசவு செய்து வருவதாக தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து