முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மூன்றாவது முறையாக நாட்டை ஆள பா.ஜ.க.வுக்கு தகுதி உள்ளது: ஓ. பன்னீர் செல்வம் பேட்டி

வியாழக்கிழமை, 28 செப்டம்பர் 2023      தமிழகம்      அரசியல்
OPS 2022 12 29

சென்னை, மூன்றாவது முறையாக நாட்டை ஆள பா.ஜ.க.விற்கு தகுதி உள்ளது என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்தார். 

பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. விலகிய நிலையில், முன்னாள் முதல்வர்  ஓ பன்னீர் செல்வம் நேற்று தனது ஆதரவாளர்களுடன்  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், புகழேந்தி, வெல்லமண்டி நடராஜன், மருது அழகுராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த ஆலோசனைக்கு பிறகு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

கடந்த ஒரு மாத காலமாக பா.ஜ.க. தேசிய தலைமையிடம் இருந்து என்னிடம் தினமும் பேசி வருகிறார்கள். பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி முறிவு நாடகம் என்று நீங்களே (செய்தியாளர்கள்) கூறுகிறீர்கள்.   பா.ஜ.க.வுக்கு தொடர்ந்து நம்பிக்கை துரோகத்தில் ஈடுபடுவது யார் என்று உங்களுக்கு தெரியும். பிரதமருக்கு அருகில் இருந்து விட்டு தற்போது உறவு இல்லை என சொல்வது யார்? 

பா.ஜ.க. தேசிய தலைமையிடம் மாநில தலைமையிடம் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைக்க எடப்பாடிக்கு என்ன தகுதி உள்ளது. பா.ஜ.க. மூன்றாவது முறையும் நாட்டை ஆள்வதற்கான தகுதியை பெற்றுள்ளது. பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயராக உள்ளோம். அ.தி.மு.க. ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் வெற்றி பெற முடியும். பாராளுமன்றத்திற்கும்,  சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. அ.தி.மு.க., பா.ஜ.க. உறவு முறிந்தாலும் அது நாடகம் என்றாலும் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தொடர்ந்து பண்ருட்டி ராமச்சந்திரன் கூறுகையில்,  பா.ஜ.க.வின் முடிவைப் பொருத்து நானும் ஓ. பன்னீர் செல்வமும் சேர்ந்து பேசி முடிவெடுப்போம். அ.தி.மு.க. பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளோம்.  2026-ல் பா.ஜ.க. ஆட்சிக்கு வரும் என்று அண்ணாமலை கூறிய பிறகே எடப்பாடி பழனிசாமி விழித்துக் கொண்டார். அண்ணா, ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதற்கு எடப்பாடி கவலைப்படவில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து