முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத அச்சுறுத்தல்கள் இனி முற்றிலுமாக ஒழிக்கப்படும் : பாக். ராணுவ தளபதி திட்டவட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 1 அக்டோபர் 2023      உலகம்
Pak 2023-10-01

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இனி முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று ராணுவ தளபதி சையத் அசிம் முனிர் உறுதிபட தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானில் உள்ள பலோசிஸ்தான் பிராந்தியத்தின் மஸ்டங் பகுதியில் நடைபெற்ற மிலாடி நபி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அங்குள்ள மதினா மஸ்ஜித் வழிபாட்டு தலத்தில் ஒரு பயங்கரவாத தற்கொலை படை தாக்குதல் நடைபெற்றது. இதில் 60 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 

கைபர் பக்டுங்க்வா பகுதியில் உள்ள ஹங்கு எனும் இடத்தில் ஒரு காவல் நிலையம் அருகே உள்ள மசூதிக்கு அருகே மற்றொரு குண்டு வெடிப்பு நடைபெற்றது. இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்; 12-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தொடரும் தீவிரவாத தாக்குதல்களை கையாள முடியாமல் திணறுவதாக பாகிஸ்தான் அரசாங்கம் விமர்சிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் ராணுவ தளபதி ஜெனரல் சையத் அசிம் முனிர் இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 

இஸ்லாமுடன் எந்த தொடர்பும் இல்லாத ஒரு சிலர், பயங்கரவாதத்திற்கு ஆதரவு தரும் ஒரு சிலரின் துணையுடன், இத்தகைய தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இவர்கள் பாகிஸ்தான் எதிரிகளின் பிரதிநிதிகள். 

மன உறுதி மிக்க மக்களை கொண்ட ஒரு நாட்டின் பாதுகாப்பு படையின் முழு சீற்றத்தையும் இந்த தீயசக்திகள் இனிமேல்தான் காண தொடங்குவார்கள். ஓய்வு ஒழிச்சலின்றி இடைநிறுத்தம் இல்லாத ராணுவ நடவடிக்கைகள் மூலம் தீவிரவாத அச்சுறுத்தல்கள் இனி முற்றிலுமாக ஒழிக்கப்படும். இவ்வாறு முனிர் உறுதியளித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து