Idhayam Matrimony

தோனியை காப்பி அடிக்க மாட்டேன்.. என்னுடைய ஸ்டைலே வேறு : இந்திய அணி கேப்டன் ருதுராஜ் கருத்து

திங்கட்கிழமை, 2 அக்டோபர் 2023      விளையாட்டு
Rudraaj 2023-10-02

Source: provided

ஹாங்சோ : உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்காக இந்திய அணி தற்போது பயிற்சி செய்து வரும் நிலையில் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்காக ருதுராஜ் தலைமையிலான இரண்டாம் நிலை இந்திய அணி தற்போது சீனாவில் உள்ளது. 

இந்த நிலையில் இந்திய அணி ஆடவர் கிரிக்கெட் பிரிவில் நாளை கால் இறுதியில் நேபாளை எதிர்கொள்கிறது. இதற்காக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய அணி வீரர்கள் தற்போது தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் போட்டிக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய ருதுராஜ் கேள்விகளுக்கு பதில் அளித்தார். முதல் முறையாக தற்போது கேப்டனாக பதவி ஏற்றுள்ள அவர் தாம் தோனியிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர் தோனியின் கேப்டன்ஷி ஸ்டைலை மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவருடைய செயல்பாடும் வித்தியாசமாக இருக்கும். அதே போல் என்னுடைய செயல்பாடு மிகவும் வித்தியாசமானது. இதனால் தோனியை போல் காப்பி அடிக்காமல் என்னுடைய ஸ்டைலை தான் நான் பின்பற்றுவேன். தோனி இந்த தருணத்தில் என்ன செய்வார் என்பது குறித்து யோசிக்க மாட்டேன். 

அதே சமயம் நெருக்கடியான சமயத்தில் தோனி எந்த விஷயங்களை செய்வார் என்பது குறித்து யோசித்து அதை நாம் பின்பற்றுவதில் தவறில்லை. குறிப்பாக நெருக்கடியான சூழ்நிலையில் அவர் எப்படி செயல்படுவார்? குறிப்பிட்ட வீரரை அவர் எவ்வாறு போட்டியிடும் போது கையாள்வார் என்பது குறித்து நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். எனினும் என் மனதிற்கு எப்படி தோன்றுகிறதோ அதை போல் தான் நான் கேப்டனாக செயல்படுவேன். 

மும்பை இந்தியன்ஸில் நாங்க தான் டாப்.. ஆனா இந்திய அணியில் மதிப்பதே இல்லை.. நொந்து போன 2 வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்காக தங்கம் என்று அந்த மேடையில் அனைவரும் அணிக்காக நிற்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கனவாக இருக்கிறது.

நாங்கள் விளையாட்டு கிராமத்திற்கு சென்று வீரர்களை சந்தித்து அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதை கண்டு கொண்டோம். மைதானத்தின் அளவு குறித்து பல கேள்விகள் பலரும் கேட்கிறார்கள். ஆனால் நாங்கள் அடிமட்டத்திலிருந்து வரும்போது இதை போன்ற மைதானங்களில் விளையாடி தான் தற்போது சர்வதேச அளவுக்கு வந்திருக்கிறோம். எனவே இது போன்ற சிறிய மைதானத்தில் அனைவரும் விளையாடி பழகிய ஒன்றுதான் என ருதுராஜ் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து