முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் பிரபல நடிகர் மர்ம மரணம் : பூங்கா அருகே காருக்குள் பிணமாக மீட்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2023      சினிமா
Vinoth-Thomas 2023-11-19

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் பிரபல நடிகரான வினோத் தாமஸ் காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் பாம்பாட்டி பகுதியில் ஒரு பூங்கா உள்ளது. இந்த பூங்காவின் அருகே ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. அந்த காரின் கண்ணாடிகள் முழுவதும் ஏற்றப்பட்டிருந்த நிலையில் காருக்குள் ஒருவர் அமர்ந்திருப்பது தெரிய வந்தது. இதனை பூங்காவுக்கு வந்த பலரும் பார்த்தனர். 

ஆனால் அந்த நபர் காரில் இருந்து இறங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் காரின் கண்ணாடியை தட்டி பார்த்தனர். ஆனால் உள்ளிருந்து எந்த பதிலும் வரவில்லை. இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

பின்னர் காரின் கண்ணாடியை உடைத்த போது காருக்குள் இருந்தவர் உணர்வற்ற நிலையில் காணப்பட்டார். அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிணமாக இருந்தது பிரபல நடிகர் வினோத் தாமஸ் என தெரியவந்தது. 

அய்யப்பனும் கோஷியும் என்ற படத்தின் மூலம் கேரளாவில் பிரபலமானவர் வினோத் தாமஸ். இவர் ஒருமுறை வந்து பார்த்தா, நெத்தோலி ஒரு செரிய மீன்ல்ல, ஹேப்பி வெட்டிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. காரின் ஏ.சி.யில் இருந்து ஏதேனும் விஷவாயு கசிவு ஏற்பட்டு இறந்திருக்கலாமா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணமாகாத வினோத் தாமசின் உடல் தற்போது பாம்பாடி தாலுகா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நடிகர் ஒருவர் காருக்குள் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து