முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிஜு ஜனதா தளத்தில் இணைந்தார் மதுரையை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2023      அரசியல்
Biju-Janata-Dal-2023-11-28

புவனேஸ்வர், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் நேற்று இணைந்தார்.  

தமிழகத்தில் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் வி.கார்த்திகேய பாண்டியன் என்ற வி.கே.பாண்டியன். 2000-ம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர்  ஒடிசா மாநிலத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.

கடந்த 2011-ம் ஆண்டு, ஒடிசா முதல்வர் அலுவலக பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டார். அப்போதிருந்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச்செயலாளராக பணியாற்றி வந்தார். கடந்த 2019-ம் ஆண்டு, நவீன் பட்நாயக் 5-வது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, வி.கே.பாண்டியனுக்கு 5டி செயலாளர் என்ற கூடுதல் பொறுப்பும் அளிக்கப்பட்டது. 

இதன்மூலம், வி.கே.பாண்டியனுக்கு முதல்வர் நவீன் பட்நாயக்குடன் நெருக்கம் இன்னும் அதிகரித்தது. அதையொட்டி, வி.கே.பாண்டியனை அரசுப் பணியில் இருந்து விடுவித்து, அரசியலில் ஈடுபடுத்த முதல்வர் நவீன் பட்நாயக் திட்டமிட்டார்.

இந்நிலையில், ஒடிசா முதல்வரின் தனிச்செயலாளர் பொறுப்பில் இருந்து அண்மையில் விருப்ப ஓய்வு பெற்ற வி.கே.பாண்டியனுக்கு, கேபினட் அமைச்சருக்கு இணையான அரசு பொறுப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் முன்னிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் நேற்று இணைந்தார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து