எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : இன்னும் 3 மாதத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ.க.வுடன் எந்தத் தேர்தலிலும் கூட்டணி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் நேற்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஜெயலலிதா நினைவிடத்தில் டிசம்பர் 5-ம் தேதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கோரி காவல்துறையிடம் கடிதம் அளித்துள்ளோம். பட்டியலின வேட்பாளர்களை பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெறச் செய்து சமூக நீதியை நிலை நாட்டியவர் ஜெயலலிதா. ஜெயலலிதா மத்திய அரசுக்கு கொடுத்த அரசியல் அழுத்தங்களால் தான் 69 சதவீத இடஒதுக்கீடு சாத்தியமானது.
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி எழுச்சியுடன் உள்ளது. இன்னும் 3 மாதத்தில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமையும். பாஜகவுடன் எந்தத் தேர்தலிலும் கூட்டணி இல்லை. அ.தி.மு.க.வின் அடித்தளம் வலுவாக உள்ளது. பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


