முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் சுரங்க மீட்புப் பணி: பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

செவ்வாய்க்கிழமை, 28 நவம்பர் 2023      இந்தியா
Modi 2023 07 30

Source: provided

புதுடெல்லி : உத்தரகாண்ட் மீட்புப் பணியின் வெற்றி உணர்ச்சி வசப்பட வைக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர். சுரங்க விபத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுரங்கத்ல் இருந்து ஒருவரை மீட்க 2 முதல் 3 நிமிடங்கள் வரை ஆவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர். சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய மந்திரிவி.கே.சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அங்கு தாயர் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கைத்தட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பல்வேறு சவால்களை கடந்து தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ள மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்தநிலையில், பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்ட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். மீட்புப் பணியின் வெற்றி, அனைவரையும் உணர்ச்சி வசப்பட வைக்கிறது. நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களை சந்திக்கிறார்கள். சுரங்கப்பாதையில் சிக்கிய நண்பர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன், உங்கள் தைரியமும் பொறுமையும் அனைவரையும் ஊக்குவிக்கிறது. நீங்கள் அனைவரும் நலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வாழ்த்துகிறேன்.தொழிலாளர்களின் குடும்பங்கள் காண்பித்த பொறுமையும், தைரியமும் மிகவும் பாராட்டத்தக்கது. சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்க அயராது உழைத்த மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள் எனக்கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 5 days ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 5 days ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 day ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து