முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம்: கவர்னர் முடிவெடுப்பது குறித்து விதிமுறைகளை வகுக்க நேரிடும் : கேரள அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை

புதன்கிழமை, 29 நவம்பர் 2023      இந்தியா
Supreme-Court 2023-04-06

Source: provided

புதுடெல்லி : மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலதாமப்படுத்தும் விவகாரத்தில் கவர்னர் முடிவெடுப்பது குறித்து விதிமுறைகள் வகுக்க நேரிடும் என்று கேரள அரசு தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.

கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்வதாக கூறி கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு எதிராக மாநில அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 8 மசோதாக்களை பரிசீலனை செய்வதில் கவர்னர் கால தாமதம் செய்து வருவதாகவும், இது மக்களின் உரிமைகளை பறிப்பதாகவும் கேரள அரசு தனது மனுவில் கூறியிருந்தது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது உரிய காலக்கெடுவில் கவர்னர் ஒப்புதல் வழங்கவேண்டும் அல்லது மறுக்க வேண்டும். இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் கவர்னர் தரப்பில் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், கேரள அரசு குறிப்பிட்ட 8 மசோதாக்களில் 7 மசோதாக்கள் ஜனாதிபதியின் பரிசீலனைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் கூறியிருந்தார்.

இவ்வாறு 8 மசோதாக்கள் மீதும் கவர்னர் முடிவு எடுத்திருப்பதை கவனத்தில் கொண்ட நீதிபதிகள், மாநில அரசின் மனுவில் திருத்தம் செய்ய அனுமதி அளித்தனர். அத்துடன் இந்த விஷயத்தில் முதல்வர் மற்றும் மசோதாக்கள் தொடர்புடைய அமைச்சர்களுடன் கவர்னர் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர். சில அரசியல் சாமர்த்தியத்தால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம். மேலும், மசோதாக்கள் மீது காலதாமதம் இல்லாமல் கேரளா கவர்னர் முடிவெடுக்க வேண்டும். இல்லையெனில், கவர்னர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வரையறை செய்ய நேரிடும். என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து